முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை

திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை
(ஈஸ்வரி)


அன்னை மடியில் : 15 சனவரி 1941 — இறைவன் அடியில் : 7 பெப்ரவரி 2017


யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கோணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஜீவோதயன் (ஜீவா), கீதாஞ்சலி (கீதா), சுரேஷ், ரமேஷ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தினி, ஜெயகுமார், நர்மதா, நிஷானி, வசந்தமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சத்தியபாமா, நாகம்மா(திருப்பதி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வ.அருணாசலம், சி.அருணாசலம், மகாலட்சுமி, புஸ்பராணி, மற்றும் இந்திராவதி, சோமேஷ்வரி, சத்தியபாமா (பாமா), தனபால சிங்கம், புஸ்பாநாதன், நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், அஸ்வின், அகாஷ், நிக்கிஷா, சாய்ஷா, அமிர்த்தனா, அஜீஷன், அனிரா, அனிகா, அக்சயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11/02/2017 சனிக்கிழமை அன்று 4164 Sheppard Ave E.Scarborough ON M1S 1T3 இல் அமைந்துள் Ogden Funeral Homes இல் 05:00 பி.ப — 09:00 பி.ப வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 12/02/2017ஞாயிற்றுக்கிழமை அன்று 09:00 மு.ப — 11:00 மு.ப வரை கிரியை நடைபெற்று பின்னர் 256 Kingston Road Toronto  ON M4L 1S7 இல் அமைந்துள்ள St. John Norway Cemetery இல் 11:00 மு.ப தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
https://eswary.karampon.org/