முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரு. சோமசுந்தரம் முத்தையா

திரு சோமசுந்தரம் முத்தையா
ஓய்வுபெற்ற பொறியியலாளர் - கட்டட திணைக்களம்
வயது 89
கரம்பன் மேற்கு(பிறந்த இடம்) Toronto - Canada

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கரம்பன் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா நாகமுத்து தம்பதிகளின் ஏக புத்திரனும், காரைநகர் இலகடியைச் சேர்ந்த இராமப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாலாம்பிகை அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும், பாலமோகன்(ஜெர்மனி), சாந்தினி(ஜெர்மனி), ஜெயந்தினி(ஜெர்மனி), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பாக்கியலஷ்மி செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும், சிவகாம்பிகை அம்மாள், காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரூபராணி, பாலகிருஷ்ணன், சிவநேசன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், கிரிசாந்தன், பிரியங்கா, சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், கபிலன், காயத்திரி, கோகுலன், சரண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்